விபத்தில் பலியான காதலன்.. தூக்கிட்டு உயிரை மாய்த்த 12 ஆம் வகுப்பு மாணவி..! சென்னையில் ஒரு நிஜ ஏக் துஜே கேலியே

0 1426

பெற்றோரிடம் அடம்பிடித்து பைக் வாங்கிய கல்லூரி மாணவர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி பலியான நிலையில், அவருடன் பழகி வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரின் ஒரே மகன் அப்துல் சாதிக், இவர் கல்லூரிக்கு செல்வதற்காக பெற்றோரிடம் அழுது அடம்பிடித்து 10 நாட்களுக்கு முன்பு யமஹா எம்.டி.15 என்ற இரு சக்கரத்தை வாங்கினார்.

சம்பவத்தன்று திருவொற்றியூர் - எண்ணூர் விரைவுச் சாலையின் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக பைக்கை ஓட்டிய சாதிக், சுதந்திரபுரம் பெட்ரோல் பங்க் அருகே மின் கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அப்துல் சாதிக் உயிரிழந்தார்.

அப்துல் சாதிக் உயிரிழந்த செய்தி அறிந்ததும் அவருடன் பழகி வந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புதுவண்ணாரபேட்டை பாரதி நகரை சேர்ந்த அந்த மாணவி கடந்த 2 வருடங்களாக அப்துல் சாதிக் உடன் நெருங்கிப்பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அப்துல் சாதிக்கின் உடலை பார்த்து விட்டு வந்து, வீட்டில் அழுது கொண்டிருந்த அந்த மாணவி நள்ளிரவில் இந்த விபரீத முடியை தேடிக் கொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், புது வண்ணார பேட்டை போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments