சென்னை பெரம்பூர் மேம்பாலம் கீழே உள்ள சுரங்கப் பாதை தற்காலிகமாக மூடல்
சென்னை, பெரம்பூரில் முரசொலி மாறன் மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியதால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்திற்குள்ளாகினர்.
வியாசார்பாடி ஜீவா மேம்பால பணிகளுக்காக அந்தப்பாதையும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவ்வழியாகவும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மழைநீர் தேக்கத்தால், பெரம்பூர் சுரங்கபாதை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Comments