பாரம்பரிய பயறு, சிறுதானியங்களை சேமித்து மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்ற நடவடிக்கை: எல்.முருகன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிரதம மந்திரி கிசான் சம்மான் 17ஆவது கௌரவ நிதி வழங்கும் திட்டம் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
பாரம்பரிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களின் சாகுபடிகளை ஊக்குவித்து அவற்றை சேமித்து வைப்பதற்கும் மற்றும் மதிப்பு கூட்டுபொருளாக மாற்றி ஏற்றுமதி செய்து விற்பனை செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் நெல் சாகுபடியின் முதன்மை இடம் வகிப்பதால், இங்கு மாநில அரசு வேளாண் கல்லூரி அமைக்க முன்வந்தால் மத்திய அரசு அதனை பரிசீலனை செய்யும் என்று எல்.முருகன் கூறினார்.
Comments