இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய பசுபிக் - ஷெல் ஈகோ மாரத்தான் போட்டிக்கு செல்லும் கோவை மாணவர்கள்
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய பசுபிக் - ஷெல் ஈகோ மாரத்தான் போட்டிக்காக, ஹைட்ரஜனில் இயங்கும் திமி வாகனத்தை கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
திமி என்பது கார்பன் பைபர் மோனோகோக் கட்டமைப்பை பயன்படுத்தி காற்றின் இயக்கத்தால் செயல்படும் மூன்று சக்கர வாகனமாகும். இதன் சிறப்பம்சமாக சேஸ் வடிவமைப்பில், மறுபயன்பாட்டின் அடிப்படையில் PVC நெகிழி, அதிக திறன் கொண்ட மிட் டிரைவ் மோட்டார் மற்றும் தனி பயனாக்கப்பட்ட மோட்டார் கண்ட்ரோலர் போர்டு, ஹைட்ரஜன் பியூல் செல் ஆகியவை வாகனத்தின் செயல் திறனை அதிகரிக்கும் நோக்கில் மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட, எதிர் காலத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தில் பசுபிக் - ஷெல் ஈகோ மாரத்தான் போட்டி ஜூலை 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Comments