மனை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி - பெண் தலைமைக் காவலர், அவரது கணவர் கைது

0 645

சென்னை கொரட்டூர் பகுதியில் இடம் வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் பெண் தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

2021ஆம் ஆண்டில்  இடம் வாங்கித் தருவதாக கூறி, 3 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பித் தராதது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக மாலதி என்பவர் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக 3 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார், திருவொற்றியூர் காவல் நிலைய காவலர் தேவி மற்றும் அவரது கணவர் ரகு ஆகியோரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments