கனமழையால் அசாம் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரிம்கன்ஞ் மாவட்டத்தில் மட்டும் சுமார் 96 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரமபுத்திரா நதியின் துணை நதியான கோபிலி ஆற்றில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்தள்ளனர்.
ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் வேளாண் பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனிடையே வரும் 20 ஆம் தேதி வரை அசாமில் மிககனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
Comments