மது போதை தலைக்கு ஏறியதால் சாலையின் நடுவே காரை நிறுத்தி 2 மணி நேரம் உறங்கிய நபர்
மது போதை தலைக்கு ஏறியதால் சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு ஏசி போட்டு மல்லாக்க படுத்து உறங்கியதுடன், தட்டி கேட்ட காவலரையும் ஆபாச வார்த்தையால் திட்டி அராஜகம் செய்த மதுப்பிரியருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அரும்பாக்கம் 100அடி சாலையில் மாருதி சுசுக்கி வாகனம் ஒன்று வைப்பரை போட்டபடி சாலையின்நடுவே நீண்ட நேரமாக நிற்பதை பார்த்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரை ஓரம் தள்ளி அதில் இருந்தவரை தட்டி எழுப்பியபோது போதையில் இருந்தது தெரியவந்தது.
தங்க நகைகள் மின்ன போதை தலைக்கேறியபடி இருந்த அந்த நபர் தன்னை எழுப்பிய போலீசாருடன் நடுரோட்டில் வாக்குவாதம் செய்ததோடு, காரை ஓட்ட முயன்று காவலர் மீது மோதவும் சென்றார்.
நீண்ட வாக்குவாதத்திற்கு பின்காவலர்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அந்த காரை ஓட்டி சென்று போதை ஆசாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
போதையில் அட்ராசிட்டி செய்த அந்த நபர் தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments