மருங்கூர் அகழாய்வுப் பணிகளை இன்று முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்...

0 346

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் அகழ்வாய்வுப் பணிகளை இன்று காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக 50 சென்ட் நிலப்பரப்பில் இந்த அகழ்வாராய்வு பணி கீழடிக்கு இணையாக துவங்க உள்ளது.

இங்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய கருங்கல் அம்மி உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கப்பெற்றன.

மேலும்,ரோமானியர்களுடன் வர்த்தகத்தில் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தன 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments