வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் வீட்டில் பணம், நகை திருட்டு.. சொகுசுக்காரில் வந்து திருடிச் சென்ற டிப்டாப் ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

0 431

திருச்சி மாவட்டம் துறையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன்நகை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வரும் மதுரை வீரன்என்பவர் வீட்டிற்கு சொகுசுக்காரில் வந்த 5 பேர் தங்களை ஐ.டி. அதிகாரிகள் என்று கூறி தனியாக இருந்த உறவுக்கார பெண்ணிடம் பீரோ சாவியை வாங்கி பணம்,நகையை எடுத்துக்கொண்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments