இறைச்சிக் கழிவுகளுடன் தமிழகத்திற்குள் வந்த வாகனம் சிறைபிடிப்பு.. ரூ.50,000 அபராதம் விதித்து மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
கேரளாவில் இருந்து அதிகாலையில் இறைச்சிக் கழிவை ஏற்றி வந்த வாகனத்தை கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
தகவலறிந்து அங்கு சென்று விளவங்கோடு எம்.எம்.ஏ. தாரகை கத்பட், ஊராட்சி அதிகாரிகளை வரவழைத்தார். வாகன உரிமையாளருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து காவல்துறையிடம் வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
கழிவுகளுடன் அந்த வாகனம் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், சோதனைச் சாவடியிலேயே கண்காணித்து இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
Comments