மதுரை - போடி இடையேயான சோதனை ஓட்டம்.. மணிக்கு 121 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த மின்சார ரயில்..
மதுரை - போடி இடையிலான அகல ரயில் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக போடியில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தண்டவாளம், வழித்தடத்திற்கு இடையில் உள்ள 36 பாலங்கள் உள்ளிட்டவற்றின் உறுதித்தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், வெகு விரைவில் போடி - சென்னை, போடி - மதுரை இடையிலான மின்சார ரயில் போக்குவரத்து துவங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments