'தீ' யைக் காட்டிலும் தீயின் புகையே முதல் பகை.. குவைத் சம்பவம் சொல்லும் பாடம் என்ன?

0 688

குவைத் தீவிபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், கட்டடங்களில் தீப்பற்றும்போது அங்கிருப்போர் பதற்றமடையால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து தீத்தடுப்பு வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.

குவைத் தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ள நிலையில், ஏசி போன்ற மின் சாதனங்கள் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் தொடர்ந்து இயங்கும்போது மின்சார ஒயர்களில் அழுத்தம் அதிகரித்து ஒயர்கள் சூடாகி, அதன் மேல்பகுதியிலுள்ள இன்சுலேசன் உருகி தீப்பற்றுவதே மின்கசிவால் ஏற்படும் தீ விபத்து என்று கூறப்படுகிறது.

 

தீ விபத்துகளில் தீயைக் காட்டிலும் புகைதான் முதல் எதிரி என்று கூறும் வல்லுநர்கள், மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை சென்றடையும் அதீத புகைநெடி முதலில் கண் எரிச்சலையும் அடுத்த ஓரிரு நொடிகளில் மயக்கத்தையும் வரழைத்து அறைகளுக்குள்ளேயே விழவைத்துவிடும் என்று சொல்கின்றனர். எனவே புகையிலிருந்து தப்பும் வகையில் மூக்கை கைக்குட்டை போன்ற துணிகளால் கட்டிக்கொண்டு தவழ்ந்தவாறு விரைந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் கூறினர் .

 

மின்கசிவை ஏற்படுத்துவதில் junction box கள் முக்கியக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளதாக கூறும் தீ தடுப்பு வல்லுநர்கள் junction box களில் அதிக மின் சாதனத்தை இணைப்பது ஆபத்தில் முடியும் என்று விளக்கமளிக்கின்றனர்.

 

15 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள வணிகக் கட்டடங்கள் அனைத்தும் அதிக பாதுகாப்புக்குரிய கட்டடங்களாக வகைப்படுத்தப்படுவதாகவும் , அதுபோன்ற கட்டடங்களில் தீ பற்றியவுடன் மின்சாரம் நின்று விடும் வகையிலான கருவிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments