வவ்வால் கிலோ ரூ.1600, வஞ்சிரம் கிலோ ரூ.1300க்கு விற்பனை.... மீன்பிடித் தடைகாலம் முடிந்த பிறகும் வெறிச்சோடிய மீன் மார்க்கெட்டுகள்
தமிழகத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவு பெற்றதை அடுத்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் குறைந்த அளவிலேயே கரை திரும்பியதால் சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை இரு மடங்காக உயர்ந்தது.
வரத்து குறைவால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வெள்ளை வவ்வால் கிலோ 1600 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் கிலோ 1300 ரூபாய்க்கும், கொடுவாமீன் கிலோ 650 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் அனைத்து வகையான மீன்களும் விலை உயர்ந்து இருந்ததால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் களையிழந்து காணப்பட்டது.
இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் சோணங்குப்பம்,அக்கரை கோரி உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 14ம் தேதி நள்ளிரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
ஆனால் சுமார் பத்து படகுகள் வரையே கரைக்கு திரும்பியதால், மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது.
புதன்கிழமை முதல் படகுகளின் வரத்து அதிகரித்த பின்னர் மீன்களின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Comments