தேசிய அளவிலான மகளிர் சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி... செங்கல்பட்டு - ஒத்திவாக்கத்தில் ஜூன் 20 வரை நடைபெறுகிறது...

0 236

தமிழக காவல்துறை சார்பில் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கத்தில் நடைபெறும் தேசிய அளவிலான மகளிர் சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டியின் தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால், வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 454 பெண் போலீசார் பங்கேற்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழக காவல்துறையில் 21 சதவீத அளவுக்கு அதாவது 26 ஆயிரம் பெண்கள் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments