திருநள்ளாறில் கெட்டுப்போன உணவுப் பொட்டலங்கள் பறிமுதல்...
திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு வெளியே, தோஷங்களுக்கு பரிகாரமாக பக்தர்கள் வாங்கி தானம் செய்யும் உணவுப் பொட்டலங்களில் கெட்டுப்போன உணவு இடம் பெற்றுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அன்னதான பொட்டலங்களை பெறும் சிலர், அவற்றை சாப்பிடாமல், மீண்டும் விற்பனை செய்த கடைக்கே கொண்டு சென்று திருப்பித் தந்து காசு வாங்கிச் சென்றது தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நளன்குளம் பகுதியில் நடத்திய ஆய்வின் போது மறுசுழற்சி செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.
Comments