61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி ,பூஜை கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள்
மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை அடுத்து நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு புறப்பட்டனர். இதனையொட்டி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி இஷ்ட தெய்வங்களையும், கடல் மாதாவையும் வேண்டி அவர்கள் பூஜை செய்தனர்.
கடுவையாற்றின் வழியாக ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் அணிவகுத்து கடலுக்குச் சென்றனர். நீண்ட நாள் கழித்து மீன்பிடிக்கச் செல்வதால், அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பு
Comments