லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு...

0 462

தாம்பரம் அருகே லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பெருங்குளத்தூர் பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்த நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதான ஐயப்பன்,  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது, அவரை முந்திச் செல்ல முயன்ற சரக்கு லாரி  மோதியதில் சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.

நீண்ட நேரமாகியும் நண்பனை காணவில்லை, செல்போன் அழைப்பையும் ஏற்கவில்லை என சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் தேடி வந்த நிலையில், இறந்து கிடந்த ஐயப்பனை பார்த்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments