வங்கக் கடலில் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவு

0 321

வங்கக் கடல் பகுதியில் கடல்வளத்தைப் பாதுகாக்கவும், மீன்வளத்தைப் பெருக்கவும் ஏப்ரல் 15 முதல் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, கடற்கரையோர மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படகுகளைச் சீரமைத்து, வலைகள், டீசல், ஐஸ் கட்டிகள், உணவுப் பொருள்கள், மீன்பிடி உபகரணங்களைப் படகுகளில் ஏற்றி வருகின்றனர்.

 

மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை சார்பில் டோக்கன் வழங்கப்பட்ட பிறகு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோம் என நாகப்பட்டினம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர்கள் மட்டும், படகுகளில் கடலுக்குப் புறப்பட்டனர்.

மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்றவுடன், நள்ளிரவில் தடைக்காலம் முடிந்தவுடன் மீன்பிடிக்கத் தொடங்குவோம் என்று கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments