பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டுச் சந்தையில் இரவு முதல் இன்று காலை வரை 7 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை வாரச்சந்தையில் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்கப்பட்ட நிலையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி ஆட்டுச்சந்தையில் விலை அதிகரித்த போதும் பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச்சந்தையில் ஜோடி ஆடுகள் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வாரச்சந்தையில் அதிகாலை 4 மணிக்கே ஆடுகள் விற்பனை களைகட்டிய நிலையில், 3 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
Comments