கடன் கொடுத்தவர் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்

0 578

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே மாடம்பாக்கம் ஜோதி நகரில், வாங்கிய கடன் ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்காதததோடு, தன் மீது வழக்கு தொடர்ந்த ஆத்திரத்தில், கடன் கொடுத்த சகலை வீட்டிற்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் மீதும் நெருப்பு பற்றியது.

தீக்காயங்களுடன் சாலையில் உருண்ட அந்த நபர், 52 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முருகேசன் என்ற இவர், மனைவியின் சகோதரி கணவர் கோபாலகிருஷ்ணனிடம் சிறுக, சிறுக, ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கியதாகவும், இதற்காக கொடுத்த காசோலை பணம் இல்லை என்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோபாலகிருஷ்ணன் வழக்குத்தொடர்ந்த ஆத்திரத்தில், முருகேசன் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். வீட்டிற்குள் இருந்த கோபாலகிருஷ்ணனின் மனைவி சுதாரித்துக் கொண்டு தனது 8 வயது மகனை தூக்கிக் கொண்டு வெளியேறிய நிலையில் வீட்டின் முதல் தளத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments