குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

0 350

குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பது அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் மூலமாக தெரியவந்துள்ளதாக என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், gfx in குவைத் தீ விபத்தில் இராம கருப்பன், வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரீப் மற்றும் புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளதாக கூறினார்.

இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்த அமைச்சர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்படுவதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments