மனவளர்ச்சி குன்றியவரின் தாயிடம் பேசியபோது மனம் உடைந்தேன்... வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவு

0 544

Bipolar affective disorder என்ற மனவளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை தமிழக அரசு கண்காணிப்பில் எடுத்து, வாழ்நாள் முழுவதும் உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றிய மகனின் வன்முறை செயல்களை தாங்கிக்கொள்ளவும்,  மருத்துவ உதவிகளை செய்யவும் முடியவில்லை என்று தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன், மனவளர்ச்சி குன்றிய லோகேஷின்தாயிடம் பேசிய போது உள்ளம் உடைந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் மனவளர்ச்சி பாதுகாப்புச் சட்டம் 2017 இன் படி பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட வசதி எதுவானாலும் அதை செய்து தர அரசு முன்வர வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments