திருப்பத்தூரில் சாரைப் பாம்பை அடித்துக் கொன்று சமைத்து சாப்பிட்ட நபர் கைது

0 629

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டு அருகே சுற்றி திரிந்த சாரை பாம்பை அடித்து கொன்று அதை தோல் உரித்து அலசும் போது கெத்தாக இருக்கட்டுமே என்று வீடியோ பதிவு செய்து உள்ளார்.

அதனை சமூக வலைதளத்தில் பரப்பிய நிலையில் இந்த வீடியோ திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோலைராஜன் கண்ணில் பட்டதும்  நடத்திய விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கறியாக்கி சாப்பிட்டவர் ராஜேஷ்குமார் என்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments