தென்னந்தோப்பில் 128 ஆவது முறையாக இளநீர் திருட்டு... கண்டுபிடிக்க முயன்றால் திருட்டு தொடரும் என எச்சரிக்கை சுவரொட்டி

0 532

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.குளத்தூரில் தென்னந்தோப்பில் இளநீர் திருடி குடித்த கும்பல், இது தங்களின் 128 ஆவது திருட்டு எனவும் தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டிச் சென்றுள்ளனர்.

மேலும், செவ் இளநீர் மரங்களை வளர்க்க வேண்டுமென தோப்பு உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அந்த திருடர்கள், தாங்கள் யாரென கண்டுபிடிக்க முயன்றால் தங்களின் திருட்டு தொடரும் எனவும் அதில் எழுதி வைத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments