மிஸ்டர் அஜய்குமார்... அட்டாக் தங்கபாலு மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மிரட்சி ஆசை ஓகே .. பேராசை நோ.. ஈ.வி.கே.எஸ்..! சட்டை கிழியாமல் முடிந்த காங். பொதுக்குழு

0 982

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வபெருந்தகை, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சார்ந்து இருக்க போகிறோம் என்று கூட்டணி குறித்து உரிமைக்குரல் எழுப்பிய நிலையில், ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதால் சலசலப்பு உருவானது.

சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர்களின் முரண்பட்ட பேச்சுக்கள் தான் இவை..!

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சார்ந்து இருப்பது என்று கூட்டணி விவகாரத்தை இலைமறைகாயாக சாட, ஆசை இருக்கலாம், பேராசை இருக்க கூடாது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்ததால் தொண்டர்கள் கூச்சலிட்டனர்

சமூக நீதி குறித்து பேசிய பீட்டர் அல்போன்ஸுக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது

மேடையில் இவ்வளவு களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, நடு நாயகமாக அமர்ந்திருந்த மேலிடப்பார்வையாளர் அஜய்குமாரோ, மிக்சர் சாப்பிடுவது, கேக் சாப்பிடுவது, செல்போனில் பேசுவது என்று தனி உலகில் இருந்தார்.

இதனை கவனித்த கே.வி.தங்கபாலு, தான் பேச தொடங்கியதும், மிஸ்டர் அஜய்குமார்.... என்று அழைத்ததோடு.. தான் பேசுவதை கேட்கும்படி கூற மிரண்டு போனார் அவர்.

கடைசியாக மேடையில் முழங்கிய முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, என்னா வேணாலும் பேசலாம் இங்க எதுவுமே நடக்கபோவதில்லை... என்று நக்கலுடன் தனது பேச்சை முடித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments