பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி கைது

0 2093

கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். 

பெங்களூருவில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து அண்மையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகளில் கார் ஒன்றில் வந்த 5 பேர் உடலை கால்வாயில் வீசிச் சென்றதை பார்த்த போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், நடிகர் தர்ஷனின் காதலி பவித்ரா கவுடாவுக்கு சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி செல்ஃபோன் மூலம் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வந்ததாகவும், அது பற்றி அறிந்த நடிகர் தர்ஷன், ரேணுகாசுவாமியை அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும், அவர்கள் தாக்கியதில் ரேணுகாசுவாமி உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை நடந்த இடத்தில் தர்ஷனும் பவித்ரா கவுடா இருந்ததை அவர்களின் செல்ஃபோன் சிக்னல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதன் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments