நாகையை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்.. முடங்கிய போக்குவரத்து.. காரணம் என்ன?....
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் சாலை மற்றும் வெளிப்பாளையம் நாகூர் சாலைகளில் படுத்தவாறு பெண்கள் ஒப்பாரி வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
நாகையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது மருத்துவமனை அமைந்துள்ளதால் அவசர சிகிச்சை கூட பெற முடியவில்லை என குற்றம் சாட்டினர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்பாளையம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் ஆட்டோ சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Comments