பல்வேறு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. பலத்த காற்றில் சேலம் சாலையில் புளிய மரம் வேரோடு சாய்ந்தது. பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது.
திருவாரூர் மாவட்டத்தில், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நாகூர், திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், வேளாங்கண்ணி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையும் பெய்தது. மழையால் பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது.
தஞ்சை நகரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அண்ணாசாலை, பழைய பேருந்து நிலையம் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
Comments