அமுதாவுக்கு பதில் அமலா மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி... கஞ்சா புழக்கம் குறித்து புகாரளித்ததால் தாக்குதல் முயற்சி என தகவல்
சென்னை டி.பி. சத்திரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக புகாரளித்த அமுதா என்ற பெண்ணை தாக்க முயன்ற ரவுடிக் கும்பல், தவறுதலாக அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டை சகோதரி அமலாவை நோக்கி பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியது.
அமுதா கொடுத்த புகாரின்பேரில் சந்தோஷ் உள்ளிட்ட சிலரை போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். ஜாமீனில் வந்து அமுதாவின் உறவினர் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சந்தோஷ், சனிக்கிழமை அந்த வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்து தாக்குதல் நடத்த முயன்றதாகவும், பெட்ரோல் குண்டு அமலா மீது படாமல் சுவற்றில் பட்டு வெடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments