மனைவியைக் கொன்று புதைத்துவிட்டு, கணவன் தூக்கிட்டுத் தற்கொலை

0 992

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வேலைக்குச் சென்ற இடத்தில் மனைவியைக் கொன்று புதைத்துவிட்டு, கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் - ஸ்வேதா தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். பொக்லைன் இயந்திர ஓட்டுநரான சக்திவேல், நேற்று கள்ளக்குறிச்சியை அடுத்த வி.அலம்பலம் கிராம ஏரியில் வேலை செய்துகொண்டிருந்தார். ஸ்வேதாவும் அவருடன் இருந்துள்ளார்.

மதியம் திடீரென ஸ்வேதாவின் சகோதரர் செங்கமலையை போனில் அழைத்த சக்திவேல், ஸ்வேதாவைக் கொன்று புதைத்துவிட்டதாகவும் தாமும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

செங்கமலை அங்கு சென்று பார்த்தபோது, சக்திவேலின் சடலம் தூக்கில் தொங்கியவாறும், ஸ்வேதாவின்சடலம் மண்ணில் புதைக்கப்பட்டும் கிடந்துள்ளது. இரண்டு சடலங்களையும் மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments