3-வது முறை பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி

0 996


3வது முறை மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று இரவு சரியாக 7.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கி 8 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்குப் பின் தொடர்ந்து 3வது முறை பிரதமராகும் 2வது நபர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

பிரதமருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. முக்கிய இலாகாக்களான உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளியுறவு துறை ஆகியவை பாஜக வசமே இருக்கும் என்றும் ஏற்கனவே அந்த துறையில் இருந்தவர்களே அமைச்சர்களாக தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், மொரிஷியஸ், நேபாளம், செசஷல்ஸ் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகளின் தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments