மகளிர் மசோதா நிறைவேறிய பிறகு மக்களவைக்கு தேர்வாகியுள்ள 73 பெண் எம்.பி.க்கள்..!
2024 மக்களவை தேர்தலில் 73 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் மசோதா நிறைவேறிய பிறகு நடைபெற்ற முதல் மக்களைவைத் தேர்தலான இதில், பா.ஜ.க. சார்பில் மிக அதிகமாக 30 பெண்கள் எம்.பி.யாக தேர்வாயினர்.
பிற கட்சிகளில், காங்கிரஸ் சார்பில் 14, திரிணமூல் சார்பில் 11, சமாஜ்வாதி சார்பில் 4, திமுக சார்பில் 4, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜன சக்தி தலா 2 பெண்கள் எம்.பி.க்களாகி உள்ளனர்.
இவர்களில் பா.ஜ.க.வின் ஹேமமாலினி, திரிணமூல் கட்சியின் மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸின் சுப்ரிய சுலே ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய 73 எம்.பி.க்களில் மிக இளம் வயதுக்காரர் சமாஜ்வாதியின் 25 வயதான பிரியா சரோஜ் ஆவார்.
Comments