புதிய அமைச்சரவை பதவியேற்பு - டெல்லியில் தீவிர பாதுகாப்பு

0 658

பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாளை பதவியேற்கிறார். அவருக்கும், அவருடன் பதவியேற்கும் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல் துறையின் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். விழாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் பகுதிக்கு மேல் ட்ரோன்கள், கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், சிறு விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இரு நாள்களுக்கு டெல்லி மாநகரில் கட்டுப்பாடுகளும், தடை உத்தரவுகளும் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments