ஏம்மா பைத்தியமா நீயி..? அரசு பஸ் கண்டக்டர்னா.. என்ன வேனாலும் பேசுவியா ? திருப்பி பிடித்த பெண்களால் பரபரப்பு

0 1023
ஏம்மா பைத்தியமா நீயி..? அரசு பஸ் கண்டக்டர்னா.. என்ன வேனாலும் பேசுவியா ? திருப்பி பிடித்த பெண்களால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து விருத்தாசலம் செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறிய இளம் பெண்ணை  நடத்துனர் அவதூறாக பேசியதாக கூறி சம்பந்தப்பட்ட பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

பேருந்தில் ஏறியதும் தன்னை பார்த்து பைத்தியமா ? என்று கேட்ட நடத்துனரை பெண் பயணி வார்த்தைகளால் விளாசிய காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்தில் இருந்து விருத்தாசலம் செல்வதற்காக , 21 நம்பர் அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் ஏறி அமர்ந்தார். அங்கிருந்த நடத்துனரிடம் இந்த பேருந்து எந்த ஊர் வழியாக விருத்தாசலம் செல்கிறது என்று கேட்டதாகவும் , அதற்கு நடத்துனர் நீ என்ன மெண்டாலா..? எனக் கூறியதாகவும் சொல்லப்படுகின்ரது. இதனால் ஆவேசம் அடைந்த பெண் பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

தொடர்ந்து நடத்துனர் அந்தப்பெண்ணை சீண்டும் வகையிலேயே பேசிக் கொண்டிருந்ததால் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

பேருந்தில் இருந்த பயணி ஒருவர் இதனை வீடியோ எடுத்த போது , நடத்துனர் அந்தப் பொண்ண வீடியோ எடு அவர் தான் ஓவரா பேசுவதாக கூறியதால் வாக்குவாதம் தொடர்ந்தது

யாருகிட்ட வேணாலும் புகார் கொடு என்ன ஒன்னும் செய்ய முடியாது என்பது போல நடத்துனர் பேசியதாக புகார் தெரிவித்த சக பயணிகள் ,வரும் காலங்களில் பயணிகளிடம் கனிவாக பேசும்படி நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுருத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments