சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்கு எதிராக வழக்கு... 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவு

0 531

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்திருந்த நிலையில், மீண்டும் 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மூன்றாவது நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு பிறப்பித்த உத்தரவு முழுமையானதல்ல என்பதால் அந்த உத்தரவை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, வரும் 12ம் தேதி இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தார்.

பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படாமல் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை அதிகாரமிக்க நபர்கள் அணுகியிருந்தால் விசாரணையில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments