மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு மரியாதை
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 20 வயது இளைஞரின் உடலுக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான புவனேஷ் சாலை விபத்தில் சிக்கி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
புவனேஷிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம், கல்லீரல், கண் விழி மற்றும் எலும்பு ஆகியவை ஐந்திலிருந்து ஆறு நபர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்தார்.
தலைக்கவசம் தான் நம் உயிரை காப்பாற்றும் என்ற விழிப்புணர்வோடு இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Comments