கிருஷ்ணகிரியில் தொடர் கனமழையால் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 325

கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து விநாடிக்கு 892 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்த்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்ட உள்ளதால், பாதுகாப்பு கருதி 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதையடுத்து, பொங்கும் நுரையுடன் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

கர்நாடகத் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments