பழைய துணி குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பழைய துணிகள் தீயில் எரிந்து நாசம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார்மடம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த இம்ரான் என்பவர் வியாபாரம் செய்து வந்த பழைய துணிகள் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகின.
தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடோனின் மேல் மாடியில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இம்ரானை தீயணைப்புத் துறையினர் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.
Comments