தமிழக மக்களின் தீர்ப்பை பா.ஜ.க. தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது: அண்ணாமலை

0 1065

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்களின் தீர்ப்பை பா.ஜ.க. தலை வணங்கி ஏற்றுக் கொள்வதாக அண்ணாமலை கூறினார். சென்னையில் பேட்டியளித்த அவர், பிரதமரின் நலத்திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வந்து சேர புதிதாக தேர்வாகியுள்ள தமிழக எம்.பி.க்களுக்கு பா.ஜ.க. முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்தார்.

2026-இல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது தான் தங்களின் இலக்கு என்று கூறிய அண்ணாமலை, 2026-இல் கூட்டணி ஆட்சி அமையும் என்பதே தமது கணிப்பு என்றார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தால் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாமே என்ற கேள்விக்கு, தனக்கான வேலை பா.ஜ.க.வை வளர்ப்பது தானே தவிர மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அல்ல என்று அண்ணாமலை கூறினார். தமக்கு நாவடக்கம் தேவை என்று சொல்பவர்கள் நாவடக்கத்துடன் பேசி இருக்கலாமே என்றும் அவர் வினவினார்.

2019-இல் 33.25% வாக்குகள் வாங்கிய தி.மு.க. 2024-இல் 26% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, 6 சதவீத வாக்குகளை இழந்துள்ள தி.மு.க. கொண்டாடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments