செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அஜாக்கிரதையாக, செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, தனது செல்போனை ஒப்படைத்தார்.
கடந்த மாதம் 15ஆம் தேதி வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதால் 10 நாட்களுக்கு தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
Comments