நாடே எதிர்பார்த்த வாக்கு எண்ணிக்கை... வெல்லப்போவது யார்?
வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடக்கம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு
7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன
முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகளும், அதன்பின் மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்
தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைப்பு
ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க ஏற்பாடு
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்கள் முடிவுகளுக்காக காத்திருப்பு
தேர்தலில் போட்டியிட்டவர்களில் 47% பேர் சுயேட்சை வேட்பாளர்கள்
7 கட்டத் தேர்தலில் மொத்தம் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்தனர்
Comments