வெள்ளியங்கிரி மலையில் தன்னார்கள் சேகரித்த 3.5 டன் குப்பைகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு
கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படும் மூன்றரை டன் குப்பைகளை தென்கயிலாய பக்தி பேரவையினர் அகற்றினர்.
ஏழு மலைகளை கொண்ட வெள்ளியங்கிரியில் 6-வது மலை வரை சென்று சாக்லேட் கவர்கள், சிறிய பிளாஸ்டிக் கவர்கள், பிஸ்கட் பாக்கெட் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து கீழு கொண்டு வந்துள்ளதாக கூறிய பக்திப் பேரவையினர், மேலோட்டமான குப்பைகளை ஒரு குழுவும், நுண்ணிய குப்பைகளை மற்றொரு குழுவும் சேகரித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.
Comments