மதுரை மாட்டுத் தாவணியில் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம்... ஊழியர்கள் 2 பேர்க்கு அரிவாள் வெட்டு

0 965

மதுரை மாட்டுத்தாவணியில் முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு வந்து உணவகம் ஒன்றை அடித்து நொறுக்கி விட்டு ஊழியர்கள் 2 பேரை கத்தியால் வெட்டிய 6 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். கட்டையுடன் வந்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டது சி.சி.டி.வி.யில் பதிவானது.

தாக்குதலுக்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 3 பேர், தாங்கள் கேட்டதும் தண்ணீர் தரவில்லை என்று கூறி ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இது பற்றி அறிந்து அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் கூட்டாளிகளுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்டது அவர்களாகத் தான் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments