பெங்களூருவில் ஒரே நாளில் குறைந்த நேரத்தில் 11.1 செ.மீ. மழை... 133 ஆண்டு வரலாற்றை முறியடித்த கனமழை
பெங்களூருவில் நேற்றிரவு சில மணி நேரத்தில் 11.1 சென்டி மீட்டர் மழை பெய்ததால் நகரில் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. 133 ஆண்டுகளில் ஒரே நாளில் குறைந்த நேரத்தில் பெய்த அதிகபட்ச மழையளவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த வாரத்தின் பல நாட்களில் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தின் இரண்டாம் வாரம் வரை கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்த நிலையில் பெங்களூரு தனது குளிர்ந்த நிலைக்கு திரும்பியது.
Comments