கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

0 238

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைக்கு அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சர் மதிவேந்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கரங்கள் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களுக்கு திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments