அதீத போதையில் அரசுப் பேருந்தை எடுக்கவிடாமல் அதன் முன்பு படுத்து அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை எடுக்கவிடாமல் அதன்முன்பு படுத்து அட்டகாசம் செய்த போதை ஆசாமி நீண்ட போராட்டத்துக்குப் பின்அப்புறப்படுத்தப்பட்டார்.
அதீத போதையில் இருந்த அந்த ஆசாமியால் சக பயணிகளுக்குத் தொல்லை ஏற்படும் எனக் கருதி, அவரை பேருந்தில் ஏற வேண்டாம் நடத்துநர் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்து பேருந்து முன்பு படுத்த அந்த நபர், பெண் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Comments