பெண் காவலர் மரணம்: காவலரான கணவர் கைது.. மது அருந்து விட்டு வந்த கணவரை கண்டித்ததால் தகராறு

0 585

சென்னையில், காவலரான கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக காவலரை போலீஸார் கைது செய்தனர்.

ராயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பிரியங்காவும், சேகரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் பிரியங்கா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

சில தினங்களுக்கு முன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த சேகரை பிரியங்கா தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் அவரை சேகர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த சம்பவத்திற்குப் பின் கணவருடன் பேசாமல் இருந்த நிலையில் வீட்டில் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,

பிரியங்கா சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரரர் நாகராஜ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments