பெண் பாலியல் பலாத்காரம்: சினிமா தயாரிப்பாளர் கைது.. சத்து மாத்திரை எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக புகார் ))

0 751

சென்னையில், பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீழ் அயனம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் முகமது அலி தனது அலுவலகத்தில் பணியாற்றி வந்த 28 வயது பெண்ணிடம் தனக்கு திருமணமாகவில்லை எனக் கூறி பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

சத்து மாத்திரை எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததோடு தற்போது தன்னிடமுள்ள வீடியோவை இணையதளத்தில் பதிவு செய்து விடுவதாக கூறி மிரட்டுவதாக அந்த பெண்,

போலீஸில் புகாரளித்த நிலையில் முகமது அலி கைது செய்யப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments