பாலத் தடுப்பில் மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்து கணவன், மனைவி உயிரிழப்பு... உருக்குலைந்த காரில் சிக்கியவரை மீட்க முடியாமல் இருக்கையிலேயே முதலுதவி

0 572

மணப்பாறை அருகே பாலத் தடுப்பில் மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

பூந்தமல்லியைச் சேர்ந்த சசிதரன், தனது மனைவி ராஜஸ்ரீ, மகள் ருதிஷாவுடன் காரில் பழனிக்கு சென்று கொண்டிருந்தபோது, மணப்பாறை அருகே பாலத்தடுப்பில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்தில் ராஜஸ்ரீ, ருதிஷா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சசிதரனை மீட்க இயலாமல் காரிலேயே வைத்து முதலுதவி அளித்து கிரேன் மூலம் கார் மேலே தூக்கப்பட்டது.

பிறகு காரின் பாகங்களை உடைத்து சசிதரனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். சிகிச்சை பலனின்றி ராஜஸ்ரீயும் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments