நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

0 600

நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், அவரது விமான பயணத்தை ரத்து செய்தனர்.

திருச்சிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸின் கைப்பையை அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

இதையடுத்து கைப்பையை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் இருந்த 2 பாக்ஸ்களை திறந்து பார்த்தபோது ஒவ்வொன்றிலும் தலா 20 தோட்டாகள் இருந்துள்ளன.

அவசரமாக விமான நிலையம் கிளம்பியதால் கைப்பையில் தோட்டாக்கள் இருந்ததை கவனிக்கவில்லை என அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறையால் தனது கைத்துப்பாக்கியை திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்த கருணாஸ், அதற்கான ஆவணங்கள், தனது துப்பாக்கி உரிமம் போன்றவற்றையும் அதிகாரிகளிடம் காட்டினார்.

அவற்றை சரிபார்த்த பின் தோட்டாக்களை கருணாஸிடம் ஒப்படைத்த அதிகாரிகள், வெடிபொருட்களை விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என விதிகள் உள்ளதால் அவரது பயணத்தை ரத்து செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments